கொரோனா 3-வது அலை - அதிக பாதிப்பு யாருக்கு? | Corona

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது 600 ஆக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 20 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. உயிரிழப்பும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.
x
ஒமிக்ரான் பரவலுக்கு பின்னர் தமிழகத்தில் எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என பார்க்கும் போதும், 12 வயது வரையிலான சிறார்கள் 7 ஆயிரத்து 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே 13 முதல் 60 வயதுடையோர் 2 லட்சத்து 5 ஆயிரத்து 402 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோர் 35 ஆயிரத்து 632 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பலர் கிராமங்களுக்கு சென்று வந்துள்ளதால் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இதற்கிடையே தந்தி டிவிக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், இணைநோய் கொண்ட வயதானவர்களே அதிகமாக உயிரிழப்பதாக விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்