குளிர்கால ஒலிம்பிக் போட்டி - 2022; "வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை" - சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பொதுமக்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டி - 2022; வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை - சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
x
சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பொதுமக்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.  சீனாவில் வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக வீரர்களின் நலன் கருதி, ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என சீன அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது பொதுமக்களுக்கான ஒலிம்பிக் போட்டி டிக்கெட் விற்பனையையும் அந்நாடு கைவிட்டுள்ளது. அதேவேளையில், ஒலிம்பிக் போட்டியில் வீரர்களை உற்சாகமூட்ட பார்வையாளர்கள் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பார்வையாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர், அவர்களுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்