"விரைவில் கொரோனா முடிவுக்கு வரும்" - அமெரிக்க வைராலஜிஸ்ட் ஆறுதல் தகவல்

"விரைவில் கொரோனா முடிவுக்கு வரும்" "வைரஸ் உருமாறுவது மட்டுப்படும்" அமெரிக்க வைராலஜிஸ்ட் ஆறுதல் தகவல் ஒமிக்ரான் உருமாறிய வைரசால் உலகம் மற்றொரு கொரோனா அலையை எதிர்க்கொண்டுள்ள நிலையில், கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்காவை சேர்ந்த வைராலஜிஸ்ட் தெரிவித்துள்ளார்.
x

வாஷிங்டனை சேர்ந்த வைராலஜிஸ்ட் குதுப் முகமது, கொரோனா பரவல் குறித்து பேட்டியளித்துள்ளார்.  கொரோனா என்ற செஸ் விளையாட்டில் வைரஸ் மறையும் போது நாம் வெற்றியடைவோம், அப்போது நாம் முகக்கவசம் உதவியுடன் வெளியே வரலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மிகவும் வலுவான ஆயுதமாக உள்ளன எனக் கூறும் அவர், தொற்று தொடர்ந்து இருக்கப்போது இல்லை என்றும் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மனித உடலில் எதிர்ப்புசக்தி மாற்றம் அடைவது போன்று, தன்னையும் உருமாற்றம் செய்துக்கொள்ள வைரசும் முயற்சிக்கும் போது, மனிதர்களும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் போது வைரஸ் உருமாற வாய்ப்பு மட்டுப்படும் என குதுப் முகமது சுட்டிக்காட்டுகிறார். 

அப்படியே வைரஸ் உருமாறினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் எனக் கூறும் வைராலஜிஸ்ட் குதுப் முகமது, மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் போது முழு பாதுகாப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

 மனித உடலில் கொரோனாவுக்கு எதிராக போராட முக்கிய பங்கு வகிக்கும் டி-செல்கள் தடுப்பூசிகள் வாயிலாக வலுப்பெறுகின்றன என அவர் கூறியிருக்கிறார். 

இந்தியா 60 % பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பதை பாராட்டியிருக்கும் அமெரிக்க வைராலஜிஸ்ட் குதுப் முகமது, இந்திய தயாரிப்பான கோவாக்சின் 2 வயது குழந்தைக்கும் பாதுகாப்பானது என்ற ஆராய்ச்சி தகவல்களை பார்க்கிறோம், இது சிறந்த தடுப்பூசி எனவும் கூறியிருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்