5 வடகொரிய அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை - அமெரிக்கா அதிரடி
பதிவு : ஜனவரி 14, 2022, 04:27 PM
ஏவுகணை சோதனை நடத்தியதன் காரணமாக வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
ஏவுகணை சோதனை நடத்தியதன் காரணமாக வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தி இருந்தது. இந்த சோதனையை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். இந்த ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் அவர்கள் ஆற்றிய பங்குக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகார வரம்புக்குள் இருக்கிற இந்த 5 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.