அமெரிக்க ராணுவம் மீட்ட ஆப்கன் குழந்தை - மீண்டும் பெற்றோரிடம் சேர்ந்தது

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவத்தால் மீட்கப்பட்ட குழந்தை பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் அங்கிருப்பவர்களை மீட்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டது. காபூல் விமான நிலையத்தின் தடுப்பு வேலையை தாண்டி கைக்குழந்தையை அமெரிக்க வீரரிடம் ஆப்கன் பெண் ஒருவர் ஒப்படைக்கும் வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த குழந்தையின் நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், பெற்றோரிடம் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூலை சேர்ந்த கார் ஓட்டுநர் 2 மாத குழந்தையை பராமரித்து வந்ததுடன், அதன் தாத்தாவை சந்தித்து குழந்தையை ஒப்படைத்துள்ளார். அவர் மூலம் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு குழந்தையானது மீண்டும் பெற்றோரை சென்றடைந்தது.  


Next Story

மேலும் செய்திகள்