ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பாரா ஜோகோவிச்?....விசாவை ரத்து செய்து ஆஸி. அரசு அதிரடி

நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின், விசாவை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ள நிலையில், அதனை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
x
நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின், விசாவை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ள நிலையில், அதனை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ள நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாரா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதற்கு தடுப்பூசி கட்டாயம் எனும் நிலையில், இதிலிருந்து அவர் விலக்கு கேட்டு இருந்தார். இருப்பினும், தடுப்பூசி சான்றிதழை காட்டததால், ஆஸ்திரேலிய அரசு ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தது. இதனால், ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஜோகோவிச் வழக்கு தொடர்ந்து உள்ளார். வருகிற 10ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அதுவரை மெல்போர்னில் உள்ள விடுதி அறையிலேயே, ஜோகோவிச் காத்திருக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்