சீனாவில் குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு விகிதம் - அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள்

கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் சீனாவின் 10 மாகாணங்களில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
x
கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் சீனாவின் 10 மாகாணங்களில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் சமீப காலமாக பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை ஈடு செய்ய சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்த சீன அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டில் சீனாவின் 10 மாகாணங்களில் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ் சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான ஹெனானில், 1978ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பிறப்பு எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழ் சென்றுள்ளது. கடந்த 2020ல், ஒட்டுமொத்தமாக சீனாவின் பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இது 43 ஆண்டுகளில் மிகக் குறைவு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்