அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தாக்கிய ஒமிக்ரான் சுனாமி - மாகாண மேயர் எச்சரிக்கை

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை ஒமிக்ரான் சுனாமி தாக்கியுள்ளதாக அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தாக்கிய ஒமிக்ரான் சுனாமி - மாகாண மேயர் எச்சரிக்கை
x
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை ஒமிக்ரான் சுனாமி தாக்கியுள்ளதாக அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ஒரே வாரத்தில் நியூ ஜெர்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 76 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய அம்மாகாண மேயர் ஃபில் மர்ஃபி, கடந்த 6 தினங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒமிக்ரான் சுனாமி ஏற்கனவே மருத்துவ பணியாளர்களைத் தாக்க தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன், கடந்த 1 வருடத்தில் இல்லாத அளவு கொரோனா தொற்று எண்ணிக்கை ஒமிக்ரானால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்