"ஒமிக்ரானை விட அதிக பாதிப்புக்கு வாய்ப்பு" - பிரான்சில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு
பதிவு : ஜனவரி 04, 2022, 11:44 PM
ஃபிரான்சில், ஒமிக்ரானைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்படுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிரான்சில், ஒமிக்ரானைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்படுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து ஃபிரான்சின் மார்சேயில்ஸ் (Marseilles) நகருக்கு வந்த 12 பேரிடம் புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு IHU பி.1.640.2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸில் 46 பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.எச்.யூ. உருமாற்ற வைரஸ் ஒமிக்ரானை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்றும் கடந்தகால நோய் எதிர்ப்பு சக்தியை மீறி, தாக்கும் வாய்ப்பு கொண்டது  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த புதிய வகை கொரோனா இதுவரை மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.