உயிரியல் பூங்கா ஊழியரைத் தாக்கியதாக சுட்டுக் கொல்லப்பட்ட புலி
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நேபிள்ஸ் உயிரியல் பூங்காவில் ஊழியரைத் தாக்கியதற்காக புலி ஒன்று சுட்டுக் கொல்லப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட பாதை வழியாக சென்று புலிக்கு உணவு வழங்க ஊழியர் ஒருவர் முயற்சித்துள்ளார். அப்போது, ஊழியரின் கையைக் கவ்விக் கொண்ட புலி, அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. ஊழியரைக் காப்பாற்றுவதற்காக காவல் துறை அதிகாரி ஒருவர் புலியை சுட்டுக் கொன்றுள்ளார். இதனால், 8 வயதான இகோ என்று பெயரிடப்பட்ட அந்த புலி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயங்களுடன் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
