இதுவரை கொரோனா நுழையாத நாடுகள்..
கொரோனா தொற்றுதல் உருவாகி இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், 10 உலக நாடுகளில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை.
2019 இறுதியில் உருவான கொரோனா தொற்றுதலின் விளைவாக உலகெங்கும் இதுவரை சுமார் 27.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பே ஏற்படாதக நாடுகளின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. துவலு, டொக்கேலு, செய்ன்ட் ஹெலினா, பிட்காரின் தீவுகள், நியு, நவ்ரூ, கிரிபட்டி, மைக்ரோனேசியா ஆகிய பசிபிக் தீவு நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.மத்திய ஆசிய பகுதியில் உள்ள துருக்மெனிஸ்தான் நாட்டிலும், இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் இதை தொற்றுநோய் நிபுணர்கள் ஏற்க மறுக்கின்றனர்.இரண்டு ஆண்டுகளாக எல்லைகளை மூடி வைத்துள்ள வட கொரியாவிலும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
Next Story
