உக்ரேன் மீது படை எடுக்க ரஷ்யா ஆயத்தம் - எல்லைப் பகுதியில் 1.75 லட்சம் வீரர்கள்

உக்ரேன் மீது ரஷ்யா படை எடுக்க தயாராகி வருகிறது. இதைப் பற்றி ரஷ்ய அதிபர் புட்டினுடன், நீண்ட விவாதம் நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் மீது படை எடுக்க ரஷ்யா ஆயத்தம் - எல்லைப் பகுதியில் 1.75 லட்சம் வீரர்கள்
x
300 வருடங்களாக, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரேன், 1991இல் சோவியத் ஒன்றியம் நொறுங்கிய பின், விடுதலை பெற்று, தனி நாடாக மாறியது. 2014இல் உக்ரேனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா மீண்டும் கைபற்றியது. இதைத் தொடர்ந்து நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரேனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரேன் மீது படை எடுக்க 1.75 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைப் பகுதியில் ரஷ்யா நிலை நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரேனிற்கு உதவ, அங்கு ஏவுகணைகள் மற்றும் ராணுவ வீரர்களை நேட்டோ கூட்டமைப்பு நிலை நிறுத்தினால், கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புட்டின் செவ்வாய் அன்று எச்சரித்தார். உக்ரேன் மீது ரஷ்யா படை எடுப்பதை தடுக்க, புட்டினுடன் நீண்ட விவாதம் ஒன்றை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளியன்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்