ஹெல்மெட் அணிந்து சமைக்கும் பெண்கள்...! காரணம் என்ன..?

இலங்கையில் சமையல் செய்த போதே சமையல் எரிவாயு சிலிண்டர்களும், அடுப்புகளும் வெடித்து சிதறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெல்மெட் அணிந்து சமைக்கும் பெண்கள்...! காரணம் என்ன..?
x
இலங்கையில் சமையல் செய்த போதே சமையல் எரிவாயு சிலிண்டர்களும், அடுப்புகளும் வெடித்து சிதறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோவை பார்க்கையில் இந்த பெண்மணி எதற்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு சமைக்கிறார் என்ற கேள்வி எழலாம்... 
இன்று இலங்கையில் பெரும்பாலான வீடுகளில் இதுபோன்ற காட்சிகளை காணலாம் என்ற நிலையே நிலவுகிறது.  இதற்கு காரணம், எப்போது வேண்டுமென்றால் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிக்கலாம் என பெண்கள் மத்தியில் நிலவும் அச்சமே காரணமாகும். 

சமீப காலமாகவே இலங்கையில் பெண்கள் வீடுகளில் சமைக்கும் போது சமையல் எரிவாயு சிலிண்டரும், அடுப்பும் சேர்ந்து வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. 

இலங்கையில் யாழ்பாணம், வவுனியா, கிளிநொச்சி, கொழும்பு, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 4 ஆம் தேதியிலிருந்து இதுவரையில் சுமார் 120 சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே பெண்கள் ஹெல்மெட்டை பயன்படுத்துகிறார்கள். 

இச்சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகேவின் தலைமையில் 8 பேர் அடங்கிய குழுவை இலங்கை அரசு நியமித்துள்ளது. 

எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு குறித்து ஒரு புறம் விசாரணை நடைபெறும் சூழலில், இலங்கை முழுவதும் எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்