"தமிழ் பாரம்பரிய மாதம்" - லண்டனில் எழுந்த கோரிக்கை

ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என லண்டன் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
x
லண்டன் சட்டமன்றத்தில் இது தொடர்பாக முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நிக்கோலஸ் ரோஜர்ஸ், தீர்மானத்தை முன்மொழிந்தார். இங்கிலாந்தின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்கு தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், இதனால் தமிழ் பாரம்பரிய மாதம் அறிவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு லண்டன் மற்றும் பெருநகர மேயரை பேரவை கேட்டுக்கொள்கிறது என்றும் அப்போது வலியுறுத்தப்பட்டது. தமிழ்ச் சமூகம் லண்டன் நகரத்திற்கு ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கான நன்றியை பேரவை தெரிவிக்கிறது என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்