ஒமிக்ரான் மிக ஆபத்தானதாக பார்க்கப்படுவது ஏன்..? - தென் ஆப்பிரிக்கா தரவுகள் சொல்வது என்ன...?

தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுவது ஏன்...? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
ஒமிக்ரான் மிக ஆபத்தானதாக பார்க்கப்படுவது ஏன்..? - தென் ஆப்பிரிக்கா தரவுகள் சொல்வது என்ன...?
x
தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுவது ஏன்...? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...இதுவரையில் உருமாறிய கொரோனா வைரஸ்களில் மிகவும் மோசமான வைரசாக டெல்டா வைரஸ் பார்க்கப்பட்டு வந்தது. டெல்டா வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்ட போது, வைரஸ் மனித உடலில் தொற்றிக்கொள்ள உதவும் ஸ்பைக் புரதத்தில் 10 பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 3 பேருக்கு பரவும் தன்மையை கொண்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில்,டெல்டா வைரசோ ஒருவரிடம் இருந்து 8 பேருக்கு தொற்றும் வீரியத்தை கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருமாறியிருக்கும் ஒமிக்ரான் வைரசின் ஸ்பைக் புரதத்தில் 32 பிறழ்வுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அது மனித உடலில் தொற்ற கூடுதல் பலம் பெற்றுள்ளது என்பதே ஆராய்ச்சியாளர்கள் கூற்றாக இருக்கிறது.ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் தோன்றிய தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே பீட்டா, டெல்டா வைரஸ்கள் கைவரிசையை காட்டியுள்ளன. இதில் பீட்டா வைரஸ் பரவ தொடங்கி 100 நாட்களை எட்டியபோதுதான் 45 சதவீத பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. டெல்டா வைரஸ் பரவ தொடங்கி 100 நாட்களை எட்டிய போது  80 % பாதிப்பை கடந்திருந்தது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கிய 2 வாரங்களிலே 80 % பாதிப்பை கடந்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், அந்நாட்டின் 8 மாகாணங்களில் இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் கடெங் மாகாணத்தில் பதிவாகிய புதிய தொற்றுக்களில் 90 %  ஒமிக்ரான் பாதிப்பாகவே இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் ஆய்வாளர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. பாதிப்பு அதிகரிக்கும் போது இயல்பாகவே மருத்துவ தேவையும் அதிகரிக்கும் எனக் கூறும் அவர்கள், இதனால் மீண்டும் உயிரிழப்பு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரிக்கிறார்கள். எனவே தடுப்பூசி செலுத்துதலையும், கொரோனா கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.



Next Story

மேலும் செய்திகள்