புதிய விதிமுறை ட்விட்டர் அதிரடி

மற்றவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் புகைப்படங்களை இனி பகிர முடியாது என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது, ட்விட்டர் நிறுவனம். இது குறித்து கூடுதல் தகவல்களை தற்போது பார்க்கலாம்.
x
புதிய விதிமுறை ட்விட்டர் அதிரடி  

மற்றவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் புகைப்படங்களை இனி  பகிர முடியாது என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது, ட்விட்டர் நிறுவனம். இது குறித்து கூடுதல் தகவல்களை தற்போது பார்க்கலாம். ட்விட்டரின் புதிய சிஇஓவாக அமெரிக்க இந்தியரான பாரக் அகர்வால் நியமிக்கப்பட்ட அடுத்த நாளே, புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது, ட்விட்டர் நிறுவனம்.புதிய விதிகளின்படி, மற்றவர்களின் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது நபர்களாக இல்லாதவர்கள், தங்கள் அனுமதியின்றி புகைப்படம் பகிரப்பட்டிருப்பதாக புகார் அளித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அகற்றப்படும் என்றும் ஊடகங்கள் மற்றும் பொது நலனுக்காக பகிரப்படும் புகைப்படங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரியவந்துள்ளது.ஏற்கனவே ட்விட்டர் ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களான தொலைப்பேசி எண் மற்றும் முகவரி போன்ற தகவல்களை வெளியிடுவதை தடை செய்துள்ளது.ஆனால் தனிநபர்களை அச்சுறுத்தும் விதமாக பெண்கள் மற்றும் சமூகத்திற்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் தவறான வதந்திகளை பரப்புவதை தடுக்க இந்த புதிய விதிமுறை உதவும் என தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்