என்ன நடக்கிறது ஸ்வீடனில்? - அரசியல் திருப்பங்கள்

ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மெக்தலினா ஆண்டர்சன், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
என்ன நடக்கிறது ஸ்வீடனில்? - அரசியல் திருப்பங்கள்
x
ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மெக்தலினா ஆண்டர்சன், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். 

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அடைந்த 7 மணி நேரத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவர் மெக்டலினா ஆண்டர்சன்.

அடுத்த வருடம் செப்டம்பரில் ஸ்வீடனுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஸ்டீபன் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமராகவும், நாட்டின் முதல் பெண் பிரதமராகவும் கடந்த வாரம் பதவியேற்றார் மெக்டலினா

தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, கூட்டணியில் உள்ள க்ரீன் கட்சி ஆதரவை திரும்ப பெற்று வெளிநடப்பு செய்ததால், ஆளுங்கட்சியின் பட்ஜெட் நிறைவேறாமல் போனது. இதற்கு பொறுப்பேற்று மெக்டலினாவும் 7 மணி நேரத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஸ்வீடன் சட்டப்படி பாராளுமன்றத்தில் 175 உறுப்பினர்கள் எதிர்ப்பு இல்லாவிட்டால், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இருக்காது.

இந்த சூழலில், மீண்டும் ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில் 75 உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில், பிரதமர் மெக்டலினாவிற்கு ஆதரவாக 101 உறுப்பினர்களும், எதிராக 173 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 2 வாக்குகள் குறைவாக இருந்ததால், ஆட்சி தப்பியதோடு, ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஸ்வீடனின் பிரதமரானார் மெக்டலினா ஆண்டர்சன். 

இவரது தலைமையிலான புதிய அமைச்சரவை அமைகிறது.

ஆட்சியையும், பதவியையும் தக்கவைத்தாலும், எந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி அமல்படுத்த முடியாது என்ற நிர்பந்தமும் மெக்டலினாவிற்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்