"உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" - ஒமிக்ரான் : எச்சரிக்கும் WHO
பதிவு : நவம்பர் 30, 2021, 02:34 PM
ஒமிக்ரான் வைரசால் உலக அளவில் மிக அதிகமாக ஆபத்துக்கள் உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது....
ஒமிக்ரான் வைரசால் உலக அளவில் மிக அதிகமாக ஆபத்துக்கள் உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது....

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் குறித்து அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை பகிர்ந்துவரும் உலக சுகாதார அமைப்பு, ஒமிக்ரான் வைரசால் உலக அளவில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் மிக அதிகமாக உள்ளன என்று உலக நாடுகளை எச்சரித்துள்ளது.

வேறு எந்த உருமாற்றத்திலும் இல்லாத வகையில் ஒமிக்ரான் வைரசின் ஸ்பைக் புரதத்தில் அதிகமான பிறழ்வுகள் உள்ளன எனக் குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு,
  
இதனால் வைரஸ் உலக அளவில் மிகவும் அதிவேகமாக பரவவும், பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புக்கள் உள்ளன எனக் கூறியிருக்கிறது.

ஒமிக்ரான் தொற்றில் நோயின் தீவிரத்தன்மை எப்படி இருந்தாலும், தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சுகாதார கட்டமைப்புகளின் தேவையை அதிகரிக்கும், இதனால் உயிரிழப்பும் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளது.

மக்களுக்கு குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தியிருக்கும் நாடுகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனக் கூறியிருக்கும் உலக சுகாதார அமைப்பு, 

கொரோனா கட்டுப்பாடுகளையும், தடுப்பூசி செலுத்துதலையும் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியாவசிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.