பிரசவ வலியுடன் சைக்கிள் ஓட்டிச் சென்ற எம்.பி - அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்

நியூசிலாந்து நாட்டில் பிரசவ வலியுடன் சைக்கிளை ஓட்டிச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
x
நியூசிலாந்து நாட்டில் பிரசவ வலியுடன் சைக்கிளை ஓட்டிச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். 41 வயதான இவருக்கு அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்படவே, தானே சைக்கிளை ஓட்டிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிறிது நேரத்திலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜூலி கடந்த 2018ம் ஆண்டு தன் முதல் குழந்தையை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்