அச்சத்தை ஏற்படுத்தும் ஒமிக்ரான்: "அதீத எச்சரிக்கையுடன் இருங்கள்" - பிரதமர் மோடி அறிவுறுத்தல்

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றை அதிக எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
அச்சத்தை ஏற்படுத்தும் ஒமிக்ரான்: அதீத எச்சரிக்கையுடன் இருங்கள் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x
இரண்டு அலைகளாக இந்தியாவை மிரட்டிவிட்டு, சற்று ஓய்ந்துள்ள கொரோனா பெருந்தொற்று, தற்போது மீண்டும் இந்தியா உட்பட உலக நாடுகளை பீதி அடைய வைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று டெல்டாவை வகையைவிட அதிதீவிரமாக பரவக்கூடியது என அஞ்சப்படுவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

ஒமிக்ரான் வகை தொற்று பரவாமல் இருப்பதை உறுதிப்படுத்த, தொற்று கண்டறியப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலிறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். 

அதில், புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் குறித்தும், அதன் பண்புகள் மற்றும் வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் கேட்டறிந்தார்

புதிய வகை தொற்று பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர்,

அபாயத்திற்கு உரியவை என வகைப்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்

ஒரே இடத்தில் அதிக தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளை ஆராய்ந்து, நோய் தடுப்பில் ஈடுபடுமாறு வலியுறுத்திய பிரதமர் மோடி,

இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

விமான நிலையம், சென்னை
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை முறைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்