பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரை - 95 நாடுகளில் இலவசமாக தயாரிக்க அனுமதி

பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா சிகிச்சை மாத்திரையை, இதர நிறுவனங்கள் ராயல்டி தொகை அளிக்காமல் தயாரிக்க அனுமதித்துள்ளது.
பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரை - 95 நாடுகளில் இலவசமாக தயாரிக்க அனுமதி
x
பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா சிகிச்சை மாத்திரையை, இதர நிறுவனங்கள் ராயல்டி தொகை அளிக்காமல் தயாரிக்க அனுமதித்துள்ளது. 

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் பைசர் நிறுவனம், கொரோனா நோய் சிகிச்சைக்காக, மாத்திரை ஒன்றை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறது. கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் மற்றும் நோய் தீவிரமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஆகியவற்றை, இந்த மாத்திரை, 89 சதவீதம் குறைப்பதாக சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 95 நாடுகளில், ராயல்டி அளிக்காமல் உற்பத்தி செய்து கொள்ள, பைசர் நிறுவனம் தற்போது அனுமதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 95 நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், இந்த மாத்திரையை இனி தடையில்லாமல் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். இதற்கான ராயல்டி தொகை எதுவும் பைசர் நிறுவனத்திற்கு அளிக்க தேவையிருக்காது. இந்த 95 நாடுகளில், உலக மக்கள் தொகையில் 53 சதவீதத்தினர் வாழ்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்