உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல்; 6 பேர் பலி-30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

உகாண்டாவில் இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல்; 6 பேர் பலி-30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
x
உகாண்டாவில் இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர். உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உலக பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதற்காக தமிழக வீர‌ர்கள் 9 பேர் உள்பட 54 வீர‌ர்கள் அடங்கிய இந்திய அணி அங்கு சென்றிருந்த‌ நிலையில், வீர‌ர்கள் தங்கியிருந்த அறைக்கு அருகே திடீரென வெடிகுண்டு வெடித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வீர‌ர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர். இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக இந்திய பாரா பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல், அந்நாட்டின் பாராளுமன்றம் அருகேயும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் மற்றும் தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் 3 பேர் என மொத்தம் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், கம்பாலாவில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்