இந்தியாவில் கொரோனா தொற்றுதல் குறைவு - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் அறிவிப்பு

இந்தியா செல்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுதல் குறைவு - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் அறிவிப்பு
x
இந்தியா செல்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் அறிவித்துள்ளது. 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள அமெரிக்கர்கள் இந்தியா செல்வதற்கு, முதல் நிலை அறிவிப்பை, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு இந்தியாவில் கொரோனா தொற்றுதல் ஏற்பட, தீவிர நோய் தொற்று உருவாக வாய்ப்பு குறைவு என்று கூறியுள்ளது.
இந்த ஆண்டு மத்தியில் நான்காம் நிலை அறிவிப்பை வெளியிட்டிருந்த அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம், ஆகஸ்ட்டில் இதை இரண்டாம் கட்ட அறிவிப்பாக குறைத்தது. ஆனால் அமெரிக்க வெளியுறவுத் துறை, தற்போது இந்தியாவிற்கு செல்பவர்களுக்கு இரண்டாம் நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிற்கு செல்லும் அமெரிக்கர்கள், குற்றச் செயல் மற்றும் பயங்கரவதாக தாக்குதல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஜம்மு காஸ்மீர் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்