மூன்றரை மணி நேரம் நடந்த ஜோ பைடன் ஷி ஜின்பிங் பேச்சு வார்த்தை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு காணொலி மூலம் இன்று நடைபெற்றது.
மூன்றரை மணி நேரம் நடந்த ஜோ பைடன் ஷி ஜின்பிங் பேச்சு வார்த்தை
x
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு காணொலி மூலம் இன்று நடைபெற்றது. 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் முதல் முறையாக, இன்று காணொலி மூலம் விரிவான பேச்சு வார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகப் போட்டிகள், மோதலாக மாறாமல் தடுக்க வேண்டும் என்று ஜோ பைடன் கூறினார். 

அமெரிக்கா, சீனா இரு நாடுகளும் வளர்ச்சி பாதையில் முக்கியமான கட்டத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிய ஷி ஜின்பிங், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றார். 

தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், தைவான் தனி நாடாக தொடர அமெரிக்கா ஆதரவு அளிப்பது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என்று ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சீனாவின் முறையற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார கொள்கைகள், அமெரிக்க தொழிலாளர்களையும், நிறுவனங்களையும் பாதிப்பதில் இருந்து பாதுகாக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்று ஜோ பைடன் கூறினார். மூனரை மணி நேரம் தொடர்ந்த இந்த பேச்சு வார்த்தையில், பருவ நிலை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்