ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் மோதலா.. வெள்ளை மாளிகை விளக்கம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் மோதலா.. வெள்ளை மாளிகை விளக்கம்
x
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில், ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கு இடையே
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. கமலா ஹாரிஸ் மீது தொடுக்கப்படும் கடுமையான விமர்சனங்கள் பற்றி ஜோ பைடன் மறுப்பு தெரிவிக்காமல் அமைதி காப்பது தொடர்பாகவும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் வீண் வதந்திகள் என்று கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளர் டிவிட்டர் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கு துணையாக கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்படுகிறார் என்றும், வாக்குரிமைகள் பிரச்சனை, அகதிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மிக துணிச்சலாக எதிர் கொண்டு வருகிறார் என்றும் ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்