ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் ஒப்பந்தம் - இந்தியா, சீனா முன்மொழிந்த திருத்தங்கள்

பருவநிலை மாற்றம் பற்றிய ஐ.நா மாநாட்டில், இந்தியாவும், சீனாவும் முன்மொழிந்த திருத்தங்களுடன் இறுதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் ஒப்பந்தம் - இந்தியா, சீனா முன்மொழிந்த திருத்தங்கள்
x
பருவநிலை மாற்றம் பற்றிய ஐ.நா மாநாட்டில், இந்தியாவும், சீனாவும் முன்மொழிந்த திருத்தங்களுடன் இறுதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. 

புவிவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் பற்றி, பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில், 200 உலக நாடுகள் பங்கு பெற்ற, ஐ.நா மாநாடு நடைபெற்றது. 

புவிவெப்பமயமாதல் அதிகரிப்பை, 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவிற்குள் நிலை நிறுத்த, இம்மாநாட்டின் இறுதியில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. 

நிலக்கரி மற்றும் ஹைட்ரோகார்பன் எரிபொருட்களுக்கான மானியங்கள் தொடர்பாக, இந்தியா மற்றும் சீனா முன்மொழிந்த திருத்தங்களுடன், இது நிறைவேற்றப்பட்டது.

நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவதற்கு பதிலாக, அவற்றின் பயன்பாட்டை வெகுவாக குறைக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்ததில் மாற்றம் செய்யப்பட்டது. ஹைட்ரோ கார்பன் எரிபொருட்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

பசுமை வாயுகள் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என்று தான் ஐ.நாவின் பருவநிலை தொடர்பான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை சுட்டிக் காட்டிய இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதாவ், வளரும் நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றார். 

பசுமை வாயுகள் வெளியேற்றத்தை குறைக்க, ஒவ்வொரு நாடும், அதற்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்