ஜின்பிங்கை சந்திக்கவுள்ள பைடன் - காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை காணொலி காட்சி வாயிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திக்க உள்ளார்.
ஜின்பிங்கை சந்திக்கவுள்ள பைடன் - காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை
x
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை காணொலி காட்சி வாயிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திக்க உள்ளார். சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவல், வர்த்தகப் போர், மற்றும் தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியவை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கசப்பு நீடித்து வருகிறது. சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தொலைபேசியில் உரையாடிக் கொண்ட போது, இரு நாடுகளும் தைவான் மீதான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். அப்போது சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ  தைவான் பிரச்சினையில் தவறான நோக்குடன் அமெரிக்கா செயல் படுவதாகத் தெரிவித்ததுடன், தைவான் சுதந்திரப் படைகளுக்கு அவர்கள் தரும் ஆதரவு இறுதியில் அவர்களுக்கே எதிர்வினையாற்றும் என்று கடுமையாக சாடினார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆன்டனி பிளின்கென், தைவான் மீதான சீன அரசின் இராணுவ, மற்றும் பொருளாதார அழுத்தங்கள் குறித்து கவலை தெரிவித்தார். இந்நிலையில், இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் பொருட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று காணொலிக் காட்சி வழியாக சந்தித்துப் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்