பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு
தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.
தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். தலைநகர் சான்டியாகோவில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இசைக்கருவிகளை இசைத்தும் உற்சாகமாக நடனமாடியும் பேரணியில் கலந்து கொண்ட பால் புதுமையினர், தங்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் சிலி அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
Next Story