கொரோனா சிகிச்சைக்கு மாத்திரை - விரைவில் இந்தியாவில் அங்கீகாரம்
பதிவு : நவம்பர் 12, 2021, 06:48 PM
கொரோனா நோய் சிகிச்சைக்கான மாத்திரைக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாடு ஆணையம் அங்கீகாரம் வழங்க உள்ளது.
கொரோனா நோய் சிகிச்சைக்கான மாத்திரைக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாடு ஆணையம் அங்கீகாரம் வழங்க உள்ளது.

Merck Sharp Dohme மற்றும் Ridgeback ஆகிய இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் Molnupiravir என்ற கொரோனோ சிகிச்சைக்கான மாத்திரையை உருவாக்கியுள்ளன. உலக அளவில், கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள முதல் மாத்திரையான இதற்கு, பிரிட்டனில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாத்திரையையை Sun Pharma நிறுவனம் Molxvir என்ற பெயரில் உற்பத்தி செய்து, விநியோகிக்க உள்ளது. இதன் சோதனை முடிவுகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாடு ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் இதற்கான அங்கீகாரம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்குள்ளான, 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நோய் தீவிரமடைவதையும், மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய நிலையையும் தவிரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.