சிறிய ரக ஹெலிகாப்டரைப் போன்ற டாக்சி - தென்கொரியாவில் நடைபெற்ற சோதனை ஓட்டம்
பதிவு : நவம்பர் 12, 2021, 03:43 PM
தென் கொரியாவில் சிறிய ஹெலிகாப்டரைப் போன்ற தோற்றமுடைய டாக்சியின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தென் கொரியாவில் சிறிய ஹெலிகாப்டரைப் போன்ற தோற்றமுடைய டாக்சியின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பிரதான விமான நிலையங்களுக்கும் தலைநகர் சியோலுக்கும் இடையே இந்த டாக்சி வசதியை நடைமுறைப்படுத்துவதன் மூலம், பயண நேரம் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய ரக ஹெலிகாப்டரைப் போன்ற தோற்றமுடைய இந்த வானூர்தியில் 2 பேர் அமரும் அளவு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இது வரும் 2025ம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.