கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயம் - 89% வரை குறைக்கும் புதிய மாத்திரை

கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயம் - 89% வரை குறைக்கும் புதிய மாத்திரை
x
பைசர் நிறுவன மாத்திரையின் பரிசோதனை முடிவுகள், பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் நிறுவனத்தின் மோல்நுபிராவிர் மாத்திரையை விட அதிக அளவு செயல் திறன் கொண்டதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழுமையான பரிசோதனை முடிவுகளை இரு நிறுவனங்களுமே வெளியிடாத நிலையில், பைசர் நிறுவனம் தங்களின் கொரோனா எதிர்ப்பு மாத்திரையின் இடைக்கால பரிசோதனை தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாத்திரையை அங்கீகரிப்பது தொடர்பான முடிவு இன்னும் சில வாரங்களுக்குள்ளக எடுக்கப்படும் என்று தெரிகிறது. 775 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், இந்த மருந்தை உட்கொண்டவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்