அமெரிக்க மாகாண தேர்தல்கள் - ஜோ பைடன் கட்சிக்கு பின்னடைவு

அமெரிக்காவில் நடைபெற்ற மாகாண தேர்தல்களில் ஜோ பைடன் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
அமெரிக்க மாகாண தேர்தல்கள் - ஜோ பைடன் கட்சிக்கு பின்னடைவு
x
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாண ஆளுநர் தேர்தலில், எதிர்கட்சியான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நியு ஜெர்சி மாகாண ஆளுநர் தேர்தலில் ஜோ பைடன் கட்சியின் வேட்பாளர் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜோ பைடனின் செல்வாக்கு வெகுவாக குறைந்து, 44 சதவீதத்தினர் மட்டுமே அவரை ஆதரிப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 2022இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற இடைத் தேர்தல்களில் ஜோ பைடன் கட்சி தோல்வியடைந்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தை இழக்க நேரிடும். இதன் விளைவாக அவர் முன்னெடுக்கும் மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகும் என்று கருதப்படுகிறது. தேர்தல் தோல்விகளை ஏற்பதாக கூறிய ஜோ பைடன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 1.75 லட்சம் கோடி டாலர் அளவிலான சமூக நலத் திட்டங்களுக்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். ஆனால் செனட் சபையில் இதற்கு போதுமான ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. செனட் சபையில் இரு கட்சிகளிடையே சம பலம் உள்ள நிலையில், ஒரு சில அதிருப்தியாளர்களினால் மசோதா தோல்வியடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்