ஐரோப்பியாவில் புதிய அலை - WHO எச்சரிக்கை

ஐரோப்பியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பியாவில் புதிய அலை - WHO எச்சரிக்கை
x
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றுதல்கள், 6 சதவீதம் அதிகரித்து, 18 லட்சமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மரணங்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து 24,000ஆக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. 53 ஐரோப்பிய நாடுகளில், மருத்துவமனைகளில் சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய மண்டலத்திற்கான தலைவர் ஹான்ஸ் கிளஞ்ச் கூறியுள்ளார்.

ஐரோப்பியாவில் தொடர்ந்து ஐந்தாவது வாரமாக கொரோனா தொற்றுதல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு புதிய அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். அடுத்த சில மாதங்களில், ஐரோப்பியாவில் 5 லட்சம் கொரோனா மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தடுப்பூசி விநியோகம் போதுமான அளவு இல்லாததும், சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் தளர்வுகளும் இதற்கு காரணமாக உள்ளதாக கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்