ரஷ்ய தொழிலதிபர் ஒலேக் டின்கோவ் - 50.9 கோடி டாலர்கள் அபராதம் விதிப்பு

ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வரி ஏய்ப்பு செய்ததற்காக, அமெரிக்க அரசுக்கு 50 கோடி டாலர்கள் அபராதம் செலுத்தியுள்ளார்.
ரஷ்ய தொழிலதிபர் ஒலேக் டின்கோவ் - 50.9 கோடி டாலர்கள் அபராதம் விதிப்பு
x
ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வரி ஏய்ப்பு செய்ததற்காக, அமெரிக்க அரசுக்கு 50 கோடி டாலர்கள் அபராதம் செலுத்தியுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த ஒலெக் டின்கோவ் என்ற தொழிலதிபர், 1996ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். டின்கோவ், வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை தொடங்கி, பெரும் கோடீஸ்வரர் ஆனார். 2013ல் அமெரிக்க குடியுரிமையை துறந்த போது, வருமான வரி மற்றும் சொத்து வரிகளை செலுத்தாமல் தவிர்க்க, தனது சொத்து மதிப்பை 3 லட்சம் டாலர்களாக குறைத்து காண்பித்தார். பின்னர் அவர் பிரிட்டனில் குடியேறினார். ஆனால் அவரின் சொத்து மதிப்பு 100 கோடி டாலர்களுக்கும் அதிகமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது. அவர் மீது பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அமெரிக்க அரசு, அவரை பிரிட்டனில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்த கோரியது. இதைத் தொடர்ந்து தனது குற்றங்களை ஒப்புக் கொண்ட ஓலெக் டின்கோவ், 50 புள்ளி 9 கோடி டாலர்களை அபராதமாக அமெரிக்க அரசுக்கு செலுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்