அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் அதி நவீன ட்ரோன்கள்
பதிவு : அக்டோபர் 28, 2021, 07:36 PM
இந்தியா - அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையின் போது, எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ரக தாக்குதல் ட்ரோன்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையின் போது, எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ரக தாக்குதல் ட்ரோன்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான், சீனா என இருமுனைப் போர் வந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் இந்தியா எல்லையில் ராணுவ கட்டமைப்புகளையும், உள்கட்டமைப்புகளையும் பலப்படுத்தி வருகிறது.

சீனா ஏற்கனவே தனது ராணுவத்தில் விங்-லூங் 2 ரக ஆளில்லா விமானங்களான ட்ரோன்களை பயன்படுத்தும் நிலையில், பாகிஸ்தானோ சீனாவிடம் இருந்தும், துருக்கியிடம் இருந்தும் ட்ரோன்களை வாங்கி குவிக்கிறது.
 
இந்நிலையில் நவீன ரக ட்ரோன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள இந்தியா, 22 ஆயிரம் கோடி ரூபாயில் மதிப்பில் அமெரிக்காவிடம் இருந்து 30 எம். கியூ. 9பி பிரிடேட்டர் ரக ட்ரோன்களை வாங்க ஆர்வம் காட்டுகிறது.
 
வரும் டிசம்பரில் இந்தியா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான டு பிளஸ் டு பேச்சுவார்த்தை வாஷிங்டன்னில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் எம். கியூ. 9பி பிரிடேட்டர் ரக ட்ரோன்களை வாங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட இந்திய கடற்படை, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலை நாடலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏற்கனவே இந்த ரக ட்ரோன்கள் 2, இந்திய கடற்படையில் குத்தகை அடிப்படையில் சேவையில் உள்ளன. எம். கியூ. 9பி பிரிடேட்டர் ரக ட்ரோன்களை அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் லாலை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவின் எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ட்ரோன் எதிரிகளை வேட்டையாடுவதில் துல்லியமானது மற்றும் அபாயகரமானது. 

ஈராக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொல்ல இந்த ரக ட்ரோனையே அமெரிக்கா பயன்படுத்தியிருந்தது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கப்படும் இந்த ட்ரோன் 2 ஆயிரத்து 223 கிலோ எடை கொடண்டது.

மணிக்கு 482 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ட்ரோன், 50 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வல்லது.  செயற்கைகோளுடன் நேரடியாக இணைக்கப்படும் ட்ரோன் தாக்குதல் இலக்கை துல்லியமாக படம் எடுத்து அனுப்பும். தாக்குதல் கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் சத்தம் எழுப்பாமல் 800 அடி உயரம் வரையில் கீழ் இறங்கி ஏவுகணைகளை வீசிவிட்டு மேல் எழும்பும்.

வீசிய ஏவுகணையில் எதிரியின் இலக்கு தாக்கப்பட்டுவிட்டதாக என்பதை தெளிவு செய்ய பாதிப்பையும் புகைப்படம் எடுத்துவிடும். எதிரிகளின் ஆயுத பலத்தை கண்டறிய உளவு விமானமாகவும் செயல்படும். தொலைபேசி உரையாடல்களையும் இடைமறித்து ஒட்டுக்கேட்கும் என்றும்  மோசமான வானிலையிலும் செயல்பட வல்லது என்றும் அமெரிக்க விமானப்படை கூறுகிறது. உலகின் மிகவும் அபாயகரமான ட்ரோனாக பார்க்கப்படும், எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ட்ரோன்கள் இந்திய படைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் என்றே பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

487 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

87 views

பிற செய்திகள்

நவ.29-ல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி என அறிவிப்பு - சிங்கு எல்லைப்பகுதியில் கூடி விவசாயிகள் ஆலோசனை

திங்கள்கிழமையன்று, நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த இருந்த டிராக்டர் பேரணி, ஒத்திவைக்கப்படுவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

8 views

83வது மன் கி பாத் - பிரதமர் மோடி உரை

83வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

18 views

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

26470 views

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

477 views

புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

132 views

கள்ளக்காதல் ஜோடிக்கு நடந்த பயங்கரம் - பட்டினி போட்டு கட்டி உதைத்த ஊர் மக்கள்

கர்நாடகாவில் கள்ளக்காதல் ஜோடியை பட்டினி போட்டு ஊர் மக்களே கட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

402 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.