தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய அதிபர் மீது வழக்குகள்
பதிவு : அக்டோபர் 28, 2021, 07:02 PM
கொரோனா பெருந்தொற்றைக் கையாண்டதில் அலட்சியமாக செயல்பட்டு வந்த பிரேசில் அதிபர் பொல்சனரோவுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகமே கொரோனாவை அரக்கனாகப் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அது வெறும் காய்ச்சல்...அல்லது அதுவும் கூட இல்லாமல் இருக்கலாம் என்று வைரசை தூசு போல் எண்ணி சர்ச்சைக் கருத்து வெளியிட்டவர் பிரேசில் அதிபர் பொல்சனரோ...

கொரோனாவால் ஏற்படும் அழிவு பொருளாதார காரணங்களுக்காக மிகைப்படுத்தப் பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மனிதர்கள் முதலையாக மாறி விடலாம் என்றும், பெண்களுக்கு தாடி வரலாம் என்றும் கேலியான கருத்துக்களையே தெரிவித்து வந்தார்...

ஆரம்பம் முதலே கொரோனா ஒரு பொய் என்பதைப் போலவும், தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருந்த பொல்சனரோ, மக்களை முகக்கவசம் அணியாமல் வெளியே வர வேண்டும் என்பது போன்ற கருத்துக்களையே கூறி வந்ததால், உலக சுகாதார அமைப்பு அவரைக் கடுமையாகக் கடிந்து கொண்டது...

உலகமே எதிர்த்து நின்றாலும் தனது நிலைப்பாட்டில் சிறிதும் மாறாமல் நிலை கொண்டிருந்த பொல்சனரோவையே ஆட்டிப் பார்த்துள்ளது அவர் மீது பாயவுள்ள சட்ட நடவடிக்கை...

பிரேசில் நாட்டில் இதுவரை 6 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ள நிலையில், 2 கோடியே 17 லட்சத்து 48 ஆயிரத்து 984 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்...

பெருந்தொற்றை மிகவும் மோசமாகக் கையாண்ட நாடுகளில் ஒன்றாக பிரேசில் மாறியதற்கு அனைவரும் கை காட்டும் ஒரே நபர் பொல்சனரோதான்...

பிரேசில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக அவர் மீது குற்றவியல் வழக்குகள் தொடர சிறப்பு நடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது...

கொரோனா பெருந்தொற்றை அதிபர் பொல்சனரோ தலைமையிலான அரசு மிகவும் மோசமாக கையாண்டதால்தான் உயிரிழப்புகள் அதிகரித்தனவா என்பது குறித்து விசாரிக்க சிறப்பு நாடாளுமன்றக் குழு 6 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது...

இந்நிலையில், பொல்சனரோ மீது பல்வேறு குற்றவியல் வழக்குகளை தொடர அரசு தலைமை வழக்கறிஞர் அகஸ்டோவை வற்புறுத்தும் அறிக்கையை சிறப்புக் குழு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது...

இது தொடர்பான் வாக்கெடுப்பில் அறிக்கைக்கு ஆதரவாக 7 பேரும் எதிராக 4 பேரும் வாக்களித்துள்ளனர்...

மந்தை எதிர்ப்பு சக்தியை அடைய கொரோனாவை நாடு முழுக்க பரவ விடும் கொள்கையைக் கடைப்பிடித்தது... மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்தது... பழங்குடியின மக்களுக்கு எதிரான இனப்படுகொலை உட்பட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பொல்சனரோ மீது சுமத்தப்பட்டுள்ளது...

மேலும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதுடன், வைரஸ் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் அதிபர் பொல்சனரோ மீது பழி சுமத்தப்பட்டுள்ளது...

இது தொடர்பாக சுமார் ஆயிரத்து 200 பக்க அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது...

ஆனால் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அதிபர் பொல்சனரோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்...

இந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று அவர் மீது வழக்கு தொடரத் தேவையா... இல்லையா என்பதை அகஸ்டோ தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது...

ஆனால் பொல்சனரோவால் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அகஸ்டோ, பொல்சனரோவுக்கு ஆதரவாகவே முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது...

சிறப்பு நாடாளுமன்றக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை அலசி ஆராய்ந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அகஸ்டோ தரப்பு தெரிவித்துள்ளது...

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

470 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

104 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

45 views

பிற செய்திகள்

ஜெர்மனியில் கொரோனா தொற்று புதிய உச்சம் - ஒரு லட்சத்தை கடந்த தினசரி பாதிப்பு

ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

8 views

கொரோனா 3-வது அலை - அதிக பாதிப்பு யாருக்கு? | Corona

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது 600 ஆக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 20 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. உயிரிழப்பும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.

57 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

16 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

19 views

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

19 views

9 Pm Prime Time Headlines

பணியிடங்களில் கட்டுப்பாடுகள்

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.