12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி - இன்னும் சில வாரங்களில் அனுமதி

அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களுக்குள்ளாக குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12-17 வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி - இன்னும் சில வாரங்களில் அனுமதி
x
அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களுக்குள்ளாக குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு அடுத்த சில வாரங்களில் தடுப்பூசி செலுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி கோரி மாடர்னா நிறுவனம் விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், 6 மாதக்குழந்தை முதல் 6 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் அனுமதி பெறப்படும் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்