புவி வெப்பமயமாதல் விளைவு - சுவிட்சர்லாந்தில் உருகும் அழகிய ரோன் பனியாறு

சுவிட்சர்லாந்தில் உள்ள பனியாறு ஒன்று புவிவெப்பமயதாலினால் வெகுவாக சுருங்கியுள்ளது.
புவி வெப்பமயமாதல் விளைவு - சுவிட்சர்லாந்தில் உருகும் அழகிய ரோன் பனியாறு
x
சுவிட்சர்லாந்தில் உள்ள பனியாறு ஒன்று புவிவெப்பமயதாலினால் வெகுவாக சுருங்கியுள்ளது.

வென்மையான பனி மலைகளையும், பசுமையான புல்வெளிகளையும் கொண்ட மிக அழகான மலைபிரதேச நாடான சுவிஸ்சர்லாந்து, சுற்றுலா பயணிகளை அதிக எண்ணிக்கையில் ஈர்க்கிறது.

சுவிஸர்லாந்தின் ஆல்பஸ் மலையில் உள்ள ரோன் பனியாற்றில் உருவாகும் ரோன் நதி, ஐரோப்பியாவின் முக்கிய நதியாகும்.

புவிவெப்பமயமாதல் காரணமாக ரோன் பனியாறு சமீப வருடங்களில் வேகமாக உருகி வருகிறது. கடந்த 150 வருடங்களில் 1.5 கிலோமீட்டர் அளவுக்கு நீளத்தை இழந்து தற்போது 7.8 கிலோமீட்டராக குறைந்து விட்டது. ஐரோப்பிய ஆல்பஸ் மலைகளில் உள்ள 50 முக்கிய பனியாறுகளில் ஒன்றான இதன் தற்போதைய தோற்றம் சோகத்தை ஏற்படுத்துகிறது.

ரோன் பனியாறு உருகி வருதால், குறுகிய காலத்திற்கு நதிகளின் நீர் மட்டம் அதிகரித்து, பின்னர் படிப்படியாக குறைந்து விடும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் நிலச்சரிவுகளும், இதர பேரிடர்களும் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்