பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனா - அதிபர் மீது குவியும் குற்றச்சாட்டுகள்

பிரேசிலில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ மீது குற்றவியல் வழக்கு தொடர சிறப்பு நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது.
பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனா - அதிபர் மீது குவியும் குற்றச்சாட்டுகள்
x
பிரேசிலில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ மீது குற்றவியல் வழக்கு தொடர சிறப்பு நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை மிகவும் மோசமாக பொல்ச்சனோரோ தலைமையிலான அரசு கையாண்டதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறி, 11 பேர் அடங்கிய சிறப்பு நாடாளுமன்றக் குழு கடந்த 6 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், அவர் மீது பல்வேறு குற்றவியல் வழக்குகளைத் தொடர அரசு தலைமை வழக்கறிஞரை வலியுறுத்தும் அறிக்கையை நாடாளுமன்றக் குழு அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தது. இதில், அறிக்கைக்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும், எதிராக 4 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பொல்சொனாரொ திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்