இத்தாலியில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி அறிமுகம்
பதிவு : அக்டோபர் 28, 2021, 01:00 PM
இத்தாலியின் ரோம் விமான நிலையத்தில், மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியின் ரோம் விமான நிலையத்தில், மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த வோலோகாப்டர் என்ற நிறுவனம் மிகச் சிறிய வடிவிலான பறக்கும் மின்சார டாக்சி ஒன்றை உருவாக்கியுள்ளது. 

இரண்டு பேர் செல்லக் கூடிய இந்த பறக்கும் டாக்சி, பார்ப்பதற்கு ஒரு சிறிய ஹெலிக்காப்ட்டரைப் போல உள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இந்த டாக்சிக்கு
ஓட்டுநர் தேவையில்லை. தானியங்கி முறையில், கம்ப்யூட்டர்கள் மூலம் துல்லியமாக இயக்கப்படுகிறது.

வோலோசிட்டி என்ற இந்த பறக்கும் டாக்சியின் மாடல் ஒன்று இத்தாலியின் தலைநகரான ரோம் நகரின் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. 

9 பேட்டரிகளில் இருந்து உருவாகும் மின்சாரத்தின் மூலம், 18 மின்சார மோட்டர்களினால் இயங்கும் இந்த பறக்கும் டாக்சி ஒரு ஹெலிக்காப்டரை விட 4 மடங்கு சத்தம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து நகரின் மையப்பகுதிக்கு 15 நிமிடங்களில் செல்லக் கூடிய இந்த பறக்கும் டாக்சியில், பயணிகளின் பெட்டிகளையும் வைக்க தனி இடம் உள்ளது.

2024இல் பயன்பாட்டிற்கு வர உள்ள இந்த வோலோசிட்டி டாக்சியின் வாடகை 150 யுரோவாக இருக்கும் என்று வோலோகாப்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்கோ ட்ரான்கோன் கூறுகிறார். 

இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்... 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

500 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

நேட்டோ தலைமையகம் எங்குள்ளது?

நேட்டோ தலைமையகம் எங்குள்ளது?

10 views

போர்க்களமாகிறதா உக்ரைன்... நடப்பது என்ன? | Ukraine

போர்க்களமாகிறதா உக்ரைன்... நடப்பது என்ன? | Ukraine

11 views

"முடிவுக்கு வருகிறது பெருந்தொற்று"

ஐரோப்பியாவில், கொரோனா தொற்று புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அங்கு பெருந்தொற்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் ஹென்ஸ் குளூஜ் கூறியுள்ளார்.

19 views

Swiggy-யின் அபார வளர்ச்சி! | Startup

செயலி மூலம் உணவு விநியோக சேவைகளை அளிக்கும் பிரபல நிறுவனமான ஸ்விக்கியில், இன்வெஸ்கோ மற்றும் சில வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் 70 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.