இத்தாலியில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி அறிமுகம்

இத்தாலியின் ரோம் விமான நிலையத்தில், மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி அறிமுகம்
x
இத்தாலியின் ரோம் விமான நிலையத்தில், மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த வோலோகாப்டர் என்ற நிறுவனம் மிகச் சிறிய வடிவிலான பறக்கும் மின்சார டாக்சி ஒன்றை உருவாக்கியுள்ளது. 

இரண்டு பேர் செல்லக் கூடிய இந்த பறக்கும் டாக்சி, பார்ப்பதற்கு ஒரு சிறிய ஹெலிக்காப்ட்டரைப் போல உள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இந்த டாக்சிக்கு
ஓட்டுநர் தேவையில்லை. தானியங்கி முறையில், கம்ப்யூட்டர்கள் மூலம் துல்லியமாக இயக்கப்படுகிறது.

வோலோசிட்டி என்ற இந்த பறக்கும் டாக்சியின் மாடல் ஒன்று இத்தாலியின் தலைநகரான ரோம் நகரின் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. 

9 பேட்டரிகளில் இருந்து உருவாகும் மின்சாரத்தின் மூலம், 18 மின்சார மோட்டர்களினால் இயங்கும் இந்த பறக்கும் டாக்சி ஒரு ஹெலிக்காப்டரை விட 4 மடங்கு சத்தம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து நகரின் மையப்பகுதிக்கு 15 நிமிடங்களில் செல்லக் கூடிய இந்த பறக்கும் டாக்சியில், பயணிகளின் பெட்டிகளையும் வைக்க தனி இடம் உள்ளது.

2024இல் பயன்பாட்டிற்கு வர உள்ள இந்த வோலோசிட்டி டாக்சியின் வாடகை 150 யுரோவாக இருக்கும் என்று வோலோகாப்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்கோ ட்ரான்கோன் கூறுகிறார். 

இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்... 


Next Story

மேலும் செய்திகள்