பிரதமரை வீட்டுக்காவலில் வைத்த ராணுவம் - ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் ராணுவம்

சூடான் பிரதமரை அந்நாட்டு ராணுவம் வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரை வீட்டுக்காவலில் வைத்த ராணுவம் - ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் ராணுவம்
x
சூடான் பிரதமரை அந்நாட்டு ராணுவம் வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் ஊடகம் ஒன்றில் பிரதமர் அப்துல்லா ஹம்டோ வீட்டினுள் நுழைந்த ராணுவ வீரர்கள் சிலர், பிரதமரையும், 4 அமைச்சர்களையும் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களின் ஆதரவில் கூட்டணி அரசு ஆட்சி அமைத்தது. பின்னர், அப்துல்லா ஹம்டோ பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினரின் நடவடிக்கைக்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்