ஐரோப்பாவில் கொரோனா அதிகரிப்பு - ரஷ்யா, துருக்கியில் பன்மடங்கு உயர்வு

ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா அதிகரிப்பு - ரஷ்யா, துருக்கியில் பன்மடங்கு உயர்வு
x
ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ரஷ்யாவிலும் வரலாறு காணாத பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், அந்நாட்டு அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்று குறைந்தாலும், கடந்த சில நாட்களாக ஐரோப்பாவில் மட்டும் தொற்று வேகமெடுத்துள்ளது. அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஒரு வாரத்தில் ஐரோப்பாவில் மட்டும் கொரோனா பரவல் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஐரோப்பாவில் மட்டுமே தொற்று அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வாரத்தில் உலகளவில் 27 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில், 13 லட்சம் ஐரோப்பாவில் உறுதி செய்யப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது,

குறிப்பாக பிரிட்டன், ரஷ்யா, துருக்கி நாடுகளில் கொரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் புதன்கிழமை மட்டும், இதுவரை இல்லாத அளவாக ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது கவலை தரும் விஷயமாக உருவெடுத்துள்ளது.

இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்ய அரசு. இதில் முக்கிய அம்சமாக, இம்மாத இறுதியில் நாடு முழுவதும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் ஒரு வாரம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார், ரஷ்ய அதிபர் புதின். ரஷ்யாவில் இதுவரை 32 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள புதின், மக்கள் தடுப்பூசி போட தயங்குவது மிகவும் வருந்தத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

அதிக திறன்மிக்க தடுப்பூசி இருந்தாலும், தடுப்பூசி போடுவதில் பலர் தயக்கம் காட்டுவதாகவும் கவலை தெரிவித்தார். எனது நெருங்கிய நண்பர்கள் கூட தடுப்பூசி போடவில்லை என குறிப்பிட்ட புதின், அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்