புதிய சமூக ஊடக நிறுவனத்தை தொடங்குகிறார் டிரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு சமூக ஊடக நிறுவனத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
புதிய சமூக ஊடக நிறுவனத்தை தொடங்குகிறார் டிரம்ப்
x
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  ஒரு சமூக ஊடக நிறுவனத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு காவலர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்காத டிரம்ப், தனது ஆதரவாளர்களை சமூக ஊடகங்கள் மூலம் தூண்டி விட்டு, இந்த வன்முறைத் தாக்குதலை நடத்தச் செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்கள், டிரம்ப்பிற்கு நிரந்தர தடை விதித்தன. 

இந்நிலையில், சொந்தமாக ஒரு சமூக ஊடக நிறுவனத்தை தொடங்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். Truth Social என்ற இந்த சமூக ஊடகம், டிரம்ப் மீடியா அன்ட் டெக்னாலஜி நிறுவனம் மூலம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். டிவிட்டரில் தலிபான்கள் பெரிய அளவில் செயல்படுவதை சுட்டிக் காட்டிய டிரம்ப், அதேநேரம் மக்களுக்கு மிகவும் பிடித்த அமெரிக்க அதிபரை டிவிட்டர் தடை செய்துள்ளதாக கூறியுள்ளார். 

பேஸ்புக், டிவிட்டர் போன்ற பெரும் நிறுவனங்ளின் ஆதிக்கத்திற்கு எதிரான போரில், தனது நிறுவனம் ஈடுபடும் என்றும், Truth Social மூலம் தனது கருத்துகளை பொது மக்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்,  டிரம்ப். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், அமெரிக்காவில் இந்த புதிய சமூக ஊடக செயலி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்