ஸ்பெயின் : எரிமலை வெடிப்பு - சீறும் லாவா

ஸ்பெயின் நாட்டின் எரிமலை வெடிப்பால் வெளியான நெருப்புக் குழம்பு வீடுகளைக் கடந்து வழிந்தோடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஸ்பெயின் : எரிமலை வெடிப்பு - சீறும் லாவா
x
ஸ்பெயின் நாட்டின் எரிமலை வெடிப்பால் வெளியான நெருப்புக் குழம்பு வீடுகளைக் கடந்து வழிந்தோடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. லா பல்மா பகுதியில் உள்ள எரிமலை வெடித்ததால் பல நாட்களாக லாவா குழம்பு வெளியேறி வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னதாகவே வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்றும் 2 நகரங்களில் இருந்து அவ்சரவசரமாக மக்கள் வெளியேற்றப்படனர். இப்போதைக்கு சீற்றம் தணிவதற்கான வாய்ப்பில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீற்றத்தால் வெளியாகும் லாவா, ஊருக்குள் புகுந்து வீடுகளைக் கடந்து வழிந்தோடும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்