மேடையில் ஏறிய சிறுவன் - போப் ஆண்டவரிடம் செய்த குறும்புகள்
பதிவு : அக்டோபர் 21, 2021, 05:24 AM
வாட்டிகனில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடையில் ஏறிய சிறுவன் செய்த குறும்புத்தனங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று புதன்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின்போது, 10 வயது சிறுவன் ஒருவன் மேடையில் ஏறி போப் ஆண்டவரின் அருகில் சென்றான்.

இருக்கையில் அமர்ந்திருந்த போப் ஆண்டவர்
சிறுவனிடம் அன்பாகப் பேசினார். அப்போது
அவரது கைகளை பிடித்துக்கொண்டு அந்த சிறுவன் துள்ளிக் குதித்து விளையாடியதை கண்டு பார்வையாளர்கள் திகைத்துப்போயினர்.

பின்னர், மீண்டும் போப் ஆண்டவரின் அருகே சென்ற சிறுவன், ஒரு கட்டத்தில், அவர் அணிந்திருக்கும் வெள்ளை தொப்பியை கொடுக்கச்சொல்லி அடம்பிடித்தான்.

சிறுவனின் இந்த செய்கையை கவனித்த, நிகழ்ச்சியின் தலைவர், சிறுவனை சமாதானப்படுத்தி தனது இருக்கையில் அமரவைத்தார்.

அதன்பிறகும் வேகம் குறையாத அந்த சிறுவன், மற்றொருவரை கையை பிடித்து அழைத்து வந்து போப் ஆண்டவரிடம் தொப்பியை வாங்கித் தருமாறு கேட்டதால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

இறுதியாக, என்ன செய்தாலும் இந்தச் சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்துக்கொண்ட போப் ஆண்டவர், தனது தொப்பியை கொடுத்ததால், சிறுவனின் ஆசை நிறைவேறியது.

போப் ஆண்டவரின் தொப்பியை அணிந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் மேடையில் இருந்து இறங்கிய சிறுவனை அனைவரும் ஆரவாரம்
செய்து உற்சாகப்படுத்தினர்.

சிறுவனின் இந்த குறும்புத்தனங்கள் எதையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ, போப் ஆண்டவரின் பாதுகாவலர்களோ,
தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய போப் ஆண்டவர், அந்த சிறுவன் தன் மனதில் இருந்த உணர்வுகளை எந்த கட்டுப்பாடுகளுமின்றி வெளிப்படுத்தியுள்ளார் எனவும், அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1449 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

457 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

74 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

37 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

28 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

26 views

பிற செய்திகள்

மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்...! - தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம்

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் எந்த நாடுகளுக்கு எல்லாம் பரவியுள்ளது என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

18 views

சீனாவா... தைவானா... யாருக்கு ஆதரவு...? - சாலமன் தீவுகளில் நடப்பது என்ன...?

சாலமன் தீவில் சீனாவுடன் கைகோர்த்து செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து ஆஸ்திரேலியா படையை அனுப்பியுள்ளது.

11 views

95வது நன்றி தெரிவிக்கும் நாள் - ராட்சத பலூன்கள் பறக்கவிடப்படும் நிகழ்வு

அமெரிக்காவில் 95வது நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்தின் போது, ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

27 views

கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவின் நோவா ஸ்கோடியா பகுதியில் கனமழையால் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

22 views

வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் - பனிப்பொழிவை ரசிக்கும் மக்கள்

வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகள், மரங்கள், கட்டடங்கள் அனைத்தும் பனிப்பொழிவால் நிரம்பியுள்ளன.

21 views

சிறு கோளை தாக்கி திசை திருப்ப முயற்சி - நாசா நிறுவனம் அனுப்பும் விண்கலம்

விண்வெளியில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சிறு கோள் ஒன்றின் மீது மோதி அதை திசை திருப்ப, விண்வெளி கலம் ஒன்றை அமெரிக்காவின் நாசா நிறுவனம் இன்று அனுப்பியுள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.