ஹைபர்சோனிக் வாகனத்தை அனுப்பி சோதனை - ஒலியை விட 5 மடங்கு வேகம் செல்லும் வாகனம்
பதிவு : அக்டோபர் 20, 2021, 01:34 AM
கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனையை சீனா நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்
அணு ஆயுத பலத்தை நீருபிக்க வளர்ந்த, வளரும் நாடுகள் ரகசியமாக அணு அயுத சோதனையில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஹைப்பர்சோனிக் அதிநவீன வாகனத்தை சீனா பரிசோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்நாட்டு ராணுவம் சோதனை முயற்சியாக அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணை வாகனத்தை விண்ணில் ஏவியதாகவும், அது விண்ணில் பறந்தபடி பூமியை சுற்றி வந்து இலக்கை நோக்கி இறங்கியதாக கூறப்பட்டுள்ளது 

இருப்பினும் திட்டமிட்டமிடப்பட்டிருந்த இடத்தில் இருந்து இரண்டரை மைல் தூரம் விலகி தரையிறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகம் செல்லக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா அணு ஆயுத சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சர், அது ஏவுகணை அல்ல, விண்வெளி வாகனம் என குறிப்பிட்டார். இருப்பினும் சீனா அணு ஆயுத ஏவுகணை சோதனையையே  நடத்தியதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுபோன்று ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணை சோதனை நடத்தியதாக முதலில் அறிவித்த நாடு ரஷ்யா. 2019ம் ஆண்டு நடந்த சோதனையில், மணிக்கு 33,000 கிலோ மீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக இலக்கை நோக்கி ஏவுகணையை செலுத்தியதாக கூறியது. கடந்த ஆண்டு அமெரிக்கா, ஒலியை விட 5 மடங்கு அல்லது மணிக்கு 6,174 கிலோ மீட்டர் வேகம் செல்லும் விதத்தில் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக கூறியது. தற்போது சீனாவும் இதே சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், இந்தியாவும் டிஆர்டிஓ மூலம் ஹைபர்சோனிக் சோதனையை வெற்றிகரமாக முடித்ததாகவும், இந்த ஏவுகணை 20 விநாடிகளில் 32.5 கிலோ மீட்டர் உயரம் பறக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

500 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுதல் குறைந்துள்ளது.

12 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

11 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

நேட்டோ தலைமையகம் எங்குள்ளது?

நேட்டோ தலைமையகம் எங்குள்ளது?

10 views

போர்க்களமாகிறதா உக்ரைன்... நடப்பது என்ன? | Ukraine

போர்க்களமாகிறதா உக்ரைன்... நடப்பது என்ன? | Ukraine

11 views

"முடிவுக்கு வருகிறது பெருந்தொற்று"

ஐரோப்பியாவில், கொரோனா தொற்று புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அங்கு பெருந்தொற்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் ஹென்ஸ் குளூஜ் கூறியுள்ளார்.

19 views

Swiggy-யின் அபார வளர்ச்சி! | Startup

செயலி மூலம் உணவு விநியோக சேவைகளை அளிக்கும் பிரபல நிறுவனமான ஸ்விக்கியில், இன்வெஸ்கோ மற்றும் சில வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் 70 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.