வங்கதேசத்தில் தொடரும் வன்முறை - ஒரு கிராமத்தில் 60 வீடுகள் சூறை

வங்கதேசத்தில் இந்துகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் தொடரும் வன்முறை - ஒரு கிராமத்தில் 60 வீடுகள் சூறை
x
வங்கதேசத்தில் இந்துகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வங்க மக்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி கொடுக்கும் துர்கா பூஜை, இந்த முறை வங்கதேச இந்துக்களுக்கு மறக்க முடியாத வலியை கொடுத்துவிட்டது.

கடந்த வாரம் புதன்கிழமை அன்று குமிலா மாவட்டத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது, இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவ, வன்முறை வெடித்தது... அன்றைய தினமே டாக்காவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சந்த்ப்பூர் பகுதியில் ஒரு கோயில் சூறையாடப்பட்டது.. அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் கோயில்கள் சூறையாடப்பட நாடு முழுவதும் பல இடங்களில் கலவரம் வெடித்தது..

ராங்பூர் மாவட்டம் மஜிபாரா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் இஸ்லாமியர்கள் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை கருத்தை பதிவிட்டதாக தகவல் வெளியாக, அந்த பகுதியில் நுழைந்த ஒரு கும்பல், 20 வீடுகளுக்கு தீ வைத்ததோடு, 60 வீடுகளை சூறையாடியது.

சட்டம் ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடிக்க, துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இதில் மாணவ அமைப்பினரும், இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது

தாக்குதல்கள் திட்டமிடப்பட்ட சதி என்றும், வன்முறையாளர்கள் மத பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா... இந்திய தரப்பிலும் வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறை சம்பவங்களில் 6க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறுவது வேதனையான தகவல்... 2013 முதல் சிறுபான்மையினருக்கு எதிராக இதுவரை 3,679 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் 559 வீடுகள், 442 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்