ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடுகள்: ரூ. 1,50,000க்கு விற்பனைக்கு வரும் லேப்டாப்கள்

பிரபல ஆப்பிள் நிறுவனம், இரண்டு புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களையும் புதிய ஏர்போட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸையும் வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடுகள்: ரூ. 1,50,000க்கு விற்பனைக்கு வரும் லேப்டாப்கள்
x
ஆப்பிள் நிறுவனம் 14 இன்ச் மற்றும் 16 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்களை வெளியிட்டுள்ளது. இந்த 14 இன்ச் மாடல் 1 லட்சத்து 50 ஆயிரத்து 116 ரூபாய்க்கும், 16 இன்ச் மாடல் 1 லட்சத்து 87 ஆயிரத்து 664.40 ரூபாய்க்கும் விற்பனையாகும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஆப்பிளின் புதிய ஏர்போட்கள் வியர்வை மற்றும் நீர்-எதிர்ப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இவை ஏர்போட்ஸ் ப்ரோவை-விட உயர் அம்சங்கள் கொண்டிருக்கும் என்று ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வின் போது கூறியது. இந்த புதிய ஏர்போட்கள் 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. ஆப்பிளின் இந்த புதிய வெளியீடுகள் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்