குளிர்கால ஒலிம்பிக் தொடர் - பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றம்

கிரீஸ் நாட்டில் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குறுக்கிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் என்ன?
குளிர்கால ஒலிம்பிக் தொடர் - பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றம்
x
சீன தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளது. இதையொட்டி, கிரீஸ் நாட்டில் உள்ள பாரம்பரியமிக்க ஒலிம்பியா மைதானத்தில், பண்டைய கால முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கிரீஸ் அதிபர் கத்ரீனா, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேக் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.அப்போது, விழா மைதானத்தின் அருகே திடீரென நுழைந்த மூன்று பேர், சீனாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். திபெத் நாட்டு தேசியக் கொடியுடன், இனவெறி தாக்குதலுக்கு எதிரான பதாகையையும் அவர்கள் கொண்டுவந்து எதிர்ப்பை வெளிக்காட்டினர்.இந்த பரபரப்புக்கு இடையே, ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.



Next Story

மேலும் செய்திகள்